SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

994
13/12/2019

3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு, மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகள், மெக்சிக்கோவில் டபஸ்கோ மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஐகான் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள வல்கன்-2 என்ற 3டி பிரின்டரானது, 3டி முறையில் பிரின்ட் செய்யப்பட்ட 500 சதுர அடியில் அமைந்த 2 வீடுகளை முதல் கட்டமாக கட்டியுள்ளது. இந்த 3டி பிரின்டரானது, 9 அடி உயரம் 28 அடி அகலம் கொண்ட, 2 ஆயிரம் சதுரஅடி வீடுகளை கட்டும் திறன் பெற்றது என ஐகான் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த 33 அடி பிரின்டரானது, அச்சு மையை பீய்ச்சி அடிப்பது போல, காங்கிரீட் கலவையை வெளித்தள்ளுகிறது. வழக்கமான முறையில் வீடு கட்டுவதைவிட இரு மடங்கு வேகத்தில் இந்த 3டி பிரின்டர் வீடுகளை கட்டுகிறது.வழக்கமான கான்கிரீட் கலவையைவிட வலிமையான கான்கிரீட் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், நிலநடுக்கம் தாங்கும் வகையில் இந்த வீடுகள் கட்டப்படுவதாகவும் நியூ ஸ்டோரி தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

  • chinnaa_hospiitt1

    25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

  • vinveli_sathanaiiii1

    விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

  • landlide_floodd_11

    பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்