SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

569
10/12/2019

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் நடைபெறும் மகாதீபத்தை தரிசிக்க பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழா ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ம் நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதிஉள்ளிட்ட மற்ற சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணியளவில் கோவின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழாவையொட்டி அண்ணாமலையார் கோவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

  • chinnaa_hospiitt1

    25,000 சதுர மீட்டர்.. 1000 படுக்கைகள்.. கொரோனா வைரஸுக்காக 6 நாள்களில் தயாராகும் சிறப்பு மருத்துவமனை : அவசரகதியில் சீன அரசு

  • vinveli_sathanaiiii1

    விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை

  • landlide_floodd_11

    பிரேசிலில் வரலாறு காணாத மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலி ; 58 நகரங்களில் இருந்து 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்