SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய கடற்படையின் முதல் பெண் விமானி ஷிவாங்கி பொறுப்பேற்பு!!

403
03/12/2019

கொச்சி:நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளில் சாதித்து வருகின்றனர். கல்வி, அறிவியல், ராணுவம் போன்ற துறைகளிலும் பெண்கள் தங்களுக்கான முத்திரையை பதித்து வருகின்றனர். ராணுவத்தின் முப்படைகளில் ஆண் வீரர்களே அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், இந்தியத் தரைப்படை, கடற்படை, விமானப்படையில் பெண் விமானிகளையும் வீராங்கனைகளையும் அதிக எண்ணிக்கையில் நியமிக்க 2016ம் ஆண்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து, முப்படைகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்திய கடற்படையின் முதல் பெண் விமானியாக பீகாரைச் சேர்ந்த சப் லெப்டினன்ட் ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் நேற்று பொறுப்பேற்றார்.கடற்படை விமான பயிற்சிகளை முடித்த ஷிவாங்கி கொச்சி கடற்படை தளத்தில் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றார். துணை அட்மிரல் ஏகே சாவ்லா விமானியாக தகுதிபெறும் ‘விங்ஸ்’ பதக்கத்தை ஷிவாங்கிக்கு அணிவித்து பொறுப்பேற்கச் செய்தார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்