SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளுத்து வாங்கிய மழை.. வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது...

825
02/12/2019

கடந்த 4 நாட்களாக சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை நேற்று காலை வரை நீடித்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது.தொடர்ச்சியாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன. இதே நிலை தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காணப்பட்டது. இந்த மழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்