SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தி. மலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : பஞ்சமூர்த்திகள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

513
02/12/2019

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலைஅம்மன், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள், சுவாமி தங்கக்கொடி மரம் முன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, விருச்சிக லக்னத்தில் காலை, 6:15 மணிக்கு கொட்டும் மழையில், 63 அடி உயர தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. முதல் நாள் விழாவில், சுவாமிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு, 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், விநாயகர் மூஷிக வாகனம், வள்ளி தெய்வானை சமேத சுப்பரமணியர் மயில் வாகனம், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசஸ்வரர் வெள்ளி அதிகார நந்தி, பராசக்தி அம்மன் வெள்ளி சிம்மவாகனம், சண்டிகேஸ்வரர் புலிக்குட்டி வாகனத்திலும், வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும், 7ல், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 10 அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவையொட்டி, கோவில் வளாகம், நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்