SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்கா பள்ளியில் மர்மநபர் சரமாரி துப்பாக்கி சூடு: 2 மாணவர்கள் உயிரிழப்பு

1011
15/11/2019

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ள சான்டா கிளாரிட்டா காலிப் எனும் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 2 மாணவர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருப்பதாக ஷெரீப் அறிவித்துள்ளார். கருப்பு ஆடை அணிந்த 16 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். பள்ளி அறைகளில் மாணவர்கள் பதுங்கிக் கிடந்த நிலையில் பெற்றோர் பெரும் பதற்றத்துடன் என்ன நடக்கிறது என்று புரியாமல் காத்திருந்தனர். ஒருவழியாக துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் சுற்றி வளைத்தனர். அவனை சுட்டுப் பிடித்துள்ள போலீசார் ஏன் அப்படி செய்தான் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு இதுபோன்ற நேரங்களில் என்ன செய்வது என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்