SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிம்பாப்வேயில் வரலாறு காணாத கடும் வறட்சி : 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் உயிரிழப்பு

1447
15/11/2019

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் 200 யானைகள் உள்பட நூற்றுக்கணக்கான வனவிலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன.மிகவும் குறைவான மழைப்பொழிவு, பருவநிலை மாற்றம், மரங்கள் அழிப்பு போன்ற காரணங்களால் அந்நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் நீர் நிலைகள் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக தொடரும் இப்போக்கினால் வனஉயிரினங்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் நீர் மற்றும் உணவின்றி 55 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது கடந்த சில வாரங்களில் 200 யானைகள் மற்றும் காட்டெருமைகள், காட்டு நாய்களும் பட்டினியால் துடிதுடித்து உயிரிழந்து வருகின்றன.இந்நிலையில் பசி மற்றும் தாகத்தால் உயிரிழக்கும் விலங்குகளின் தந்தம், பல் மற்றும் நகம் உள்ளிட்ட பாகங்களை அறுத்தெடுத்து கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்