SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் சில்லென்று கொட்டத் தொடங்கியுள்ள பனிமழை: திரும்பிய திசையெல்லாம் ரம்மியமாக காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

393
07/11/2019

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வரும் 3 நாட்களுக்கு மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவுடன், மழைக்கும் வாய்ப்புள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை கணித்திருந்தது. இந்நிலையில், புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாவும், குளிர்கால விளையாட்டிற்கு சிறந்த இடமாகவும் கருதப்படும் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் நிலவிய கடும் பனிப்பொழியால் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாகச் செல்கின்றன. ஆனால், அப்பகுதியில் திரும்பிய திசை எல்லாம் பனி மூடி ரம்மியமாக காட்சி அளிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே, அதிகப்பனிப்பொழிவால் பூஞ்ச் மற்றும் ரஜோரி சாலையை ஷோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முக்கிய சாலையான முகலாய சாலையில் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-11-2019

    15-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • princecharlesbday

    தனது 71வது பிறந்தநாளை மும்பையில் பள்ளி குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய பிரின்ஸ் சார்லஸ்: புகைப்படங்கள்!

  • childrensday

    குழந்தைகள் தின கொண்டாட்டம் இன்று: நேருவிற்கு குழந்தைகள், கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை!

  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்