SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

715
23/10/2019

டென்மார்க் நாட்டில் பழமையான கலங்கரை விளக்கத்தை இடமாற்றும் பணிகள் நடந்து வருகிறது. ரூப்ஜர்க் நூட் என்ற இடத்தில் கடந்த 1900ம் ஆண்டு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 76 அடி உயரம் கொண்ட இந்த கலங்கரை விளக்கத்தை 263 அடி தூரத்தில் உள்ள ஜூட்லேண்ட் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்ய டென்மார்க் அரசு முடிவு செய்தது. இதையடுத்து கலங்கரை விளக்கத்தை பெயர்த்தெடுத்த பொறியியல் வல்லுநர்கள் அதனை வலுவான தள்ளுவண்டியில் வைத்து, அதனை தண்டவாளம் போன்ற அமைப்பில் வைத்து தள்ளிச் செல்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 26 அடி என்ற ரீதியில் கலங்கரை விளக்கத்தை தள்ளிச் செல்லும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த கலங்கரை விளக்கம் முதலில் கட்டப்பட்ட போது கடலில் இருந்து 656 அடி தூரத்தில் கட்டப்பட்டதாக பொறியாளர்கள் குறிப்பிட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட கடலரிப்பினால் தற்போது 20 அடி தூரத்தில் இருப்பதால் அதனை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

  • tejas_prr1

    அதிநவீன சொகுசு வசதிகளை கொண்ட தனியார் ரயிலான, தேஜஸ் அதிவிரைவு ரயிலின் பிரமிப்பூட்டும் படங்கள்

  • longestt_haiii1

    உலகின் நீண்ட கூந்தலை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த குஜராத் மாணவி!!

  • loustt_afrriii11

    காப்பான் படப் பாணியில் ஆப்பிரிக்காவில் ‘லோகஸ்ட’ வெட்டுக்கிளி தாக்குதல்…! : உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்

  • kerlaa_cakke1

    கேரளாவில் 1000க்கும் மேற்பட்ட கேக் வல்லுநர்கள் உருவாக்கிய உலகின் மிக நீளமான கேக் : வியக்கத்தக்க படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்