SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள்

798
21/10/2019

பிரேசில் கடற்கரையில் கரை ஒதுங்கும் பெட்ரோலிய கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் உள்ளூர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.பிரேசில் நாட்டில் உள்ள பெர்னம்புகோ மாநிலத்தின் சுற்றுலா தளமான Porto de Galinhas பகுதியில் உள்ள கடற்கரையில் சில நாட்களாக பெட்ரோலிய கழிவுகள் கரை ஒதுங்க தொடங்கியுள்ளன. அதனை பார்த்த உள்ளூர் மக்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்கள் கைகளாலும், பாலித்தீன் பைகள் கொண்டும் அடர் பெட்ரோலிய கழிவுகளை அள்ளிச் சென்றனர். கடந்த மாதம் வடகிழக்கு கடற்கரை பகுதியில் கச்சா எண்ணெய் கசிவு இருந்ததாக பிரேசில் நாட்டு சுற்றுச்சூழல்துறை தகவல் அளித்திருந்தது.இந்நிலையில், பெர்னம்புகோ கடற்கரையில் கரை ஒதுங்கும் எண்ணெய் கழிவுகள் வெனிசுலா நாட்டு கப்பலில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்று அந்நாட்டு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ரிச்சர்டு சால்லஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்