SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

824
17/10/2019

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உணவகம் ஒன்று, உணவு பரிமாறுவதற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. முதற்கட்டமாக 2 ரோபோக்கள் பயன்படுத்த துவங்கியுள்ள அந்த உணவகம், அவற்றுக்கு சம்பா மற்றும் சமேலி எனப் பெயரிட்டுள்ளது. ராடார் சிக்னல்கள் மற்றும் கட்டளைகளுக்கு ஏற்றவாறு இயங்கும் வகையில் இந்தியாவிலேயே இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்கும் வகையில் குரல் பதிவும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளை பேசும் வகையிலும் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு புது வித அனுபவத்தை வழங்குவதற்காக ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் உணவகத்தின் உரிமையாளர் ஜீட் பசா கூறியுள்ளார். மேலும் கிழக்கிந்திய மாநிலம் ஒன்றில் ரோபோக்களை பயன்படுத்தும் முதல் உணவகம் தங்களுடையது எனவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்