SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

1041
17/10/2019

சென்னை: அதிமுகவின் 48ம் ஆண்டு தொடக்க விழா தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சியின் துவக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் அவை தலைவர் மதுசூதனன், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சட்டசபையின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, தொடர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்