SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

1292
16/10/2019

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், வெள்ளைக் குதிரையில் பவனி வரும் புகைப்படங்களை அந்நாட்டின் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் அரசு ஊடகம் வெளியிட்ட அந்தப் படங்கள், பயேக்டு (Paektu) பனிமலைகளுக்கு இடையே கிம் தனியாக வெள்ளைக்குதிரையில் செல்வதைக் காட்டுகின்றன. கொரியப் புரட்சியின் வரலாற்றில் பயேக்டு மலையில் அவர் வெள்ளை குதிரை மீது செல்வது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இதுகுறித்து பேசிய அதிகாரிகள், உலகை வியக்கவைக்கும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் அது கொரியப் புரட்சியின் அடுத்த படிக்கு இட்டுச் செல்லும் என்றும் இன்பம் ததும்பப் தெரிவித்துள்ளனர். வடகொரியாவில் கொள்கை ரீதியான முக்கிய முயற்சிகளின்போது கிம் பலமுறை அந்த மலைகளுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. அணு ஆயுதக் களைவு குறித்து அனைத்துலகச் சமூகம் கொடுக்கும் நெருக்குதலுக்கு அடிபணியப் போவதில்லை என்று இந்தப் படத்தின்மூலம் வடகொரியா காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்