SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

698
16/10/2019

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அம்மாநில மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தீ வைத்து எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால், டெல்லியை நோக்கி வீசும் காற்றில் மாசு அதிகரித்துள்ளது. இதுதொடர்பான நாசாவின் செயற்கைக்கோள் புகைப்படத்தை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. வேளாண் கழிவுப் புகையால், டெல்லியில் சுவாசிக்கும் காற்றின் தரமானது மோசம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக துவாரகா பகுதியில் காற்றின் தரமானது 480 என மிகவும் மோசமான புள்ளி அளவில் உள்ளது. துவாரகாவைத் தொடர்ந்து ரோகினி, நேரு நகர், சிரிஃபோர்ட் ஆகிய இடங்களில் காற்றின் தரமானது மிக மோசமாக உள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்