SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

817
16/10/2019

லெபனானில் வரலாறு காணாத வகையில் காட்டுத் தீ பரவி வருகின்றது. கடந்த 2 நாட்களில் வடக்கு மற்றும் தென் பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் தீ பரவியுள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்புப் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வேகமாகப் பரவி வருகின்ற காட்டுத் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, சர்வதேச நாடுகளின் உதவி கோரியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடுமையான வெப்பத்தினாலும் அனல் காற்றினாலும் லெபனானின் மலைப்பகுதிகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெய்ரூட் மற்றும் சிடோன் ஆகிய பகுதிகள் அதிகளவில் காட்டுத் தீ காரணமாக கடும் புகையினால் பாதிப்படைந்துள்ளதுடன் தன்னார்வ தீயணைப்பு வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்