SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

841
15/10/2019

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவியுடன் நேற்று பாகிஸ்தான் சென்றடைந்திருப்பது, இஸ்லாமிய நாட்டிற்கான முதல் உத்தியோகபூர்வ பயணத்தை குறிக்கிறது. பிரித்தானிய இளவரசர் வில்லியம் தன்னுடைய மனைவி கேட் உடன் நேற்று இரவு 9.30 மணிக்கு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமதாபாத் வந்தடைந்தார்.அவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய உடையில் ஒரு பிரமுகர்கள் குழு மற்றும் இரண்டு இளம் குழந்தைகள் அவர்களை சந்தித்தனர். இஸ்லாமிய நாட்டிற்கான பாரம்பரியத்தை மதிக்கும் வகையில் கேட் ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்கள் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இஸ்லாமாபாத்தில் உள்ள உயரதிகாரிகளின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்