SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

680
14/10/2019

ஐந்து நாள் பயணமாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் - ராணி மேக்சிமாக ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். இன்று காலை, குடியரசு தலைவர் மாளிகையில், நெதர்லாந்து மன்னருக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர், நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் - ராணி மேக்சிமாவை வரவேற்றனர். இதையடுத்து, நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் - ராணி மேக்சிமா இருவரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இந்நிலையில், டெல்லியில் தலைவர்களை சந்தித்து பேசும் நெதர்லாந்து மன்னர், பின்னர் அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிட்ட பின்னர், மும்பைக்கு பயணிக்கிறார். மும்பையைத் தொடர்ந்து, கேரள மாநிலத்திற்குச் செல்லும் நெதர்லாந்து மன்னர், அங்கு தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். இந்தியாவில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில், 5வது நாடாக நெதர்லாந்து திகழ்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில், அதிகளவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக நெதர்லாந்து திகழ்வதால் அந்நாட்டு மன்னரின் வருகை, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்