SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

434
14/10/2019

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு தீப்பிடித்துக் கொண்டது. நேற்றைய தினம் இந்த தீ பெருமளவில் பரவியது. இது மணிக்கு சுமார் 800 ஏக்கர் காட்டுப்பகுதியை தீ சாம்பலாக்கி வருவதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இந்த காட்டு தீயால் 76 வீடுகளும், 31 கட்டிடங்களும் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளன. இதுவரையில் அந்நெருப்பு சுமார் 7,542 ஏக்கர் நிலப்பரப்பு சாம்பலாகி விட்டது. இது வரையில் காட்டு தீயில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • modibrics

    பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி: ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த புகைப்படங்கள்!

  • 14-11-2019

    14-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • afghanblast

    ஆப்கானிஸ்தானில் கார் வெடிகுண்டு தாக்குதல்: உள்துறை அமைச்சகம் அருகே நடந்த இந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

  • venicerain

    இத்தாலியில் பெய்த மழையால் தண்ணீரில் மிதக்கும் வெனிஸ் நகரம்: 187செ.மீ அளவுக்கு மழை பதிவானதாக தகவல்

  • isrealattack

    காசாவில் ஜிகாத் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்