SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது செவ்வாய் கிரகம் அல்ல!.. காட்டுத்தீ காரணமாக ரத்த சிவப்பு நிறமாக காட்சியளித்த இந்தோனேஷியா வான்பரப்பு

604
24/09/2019

இந்தோனேஷியா வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக, அந்நாட்டின் வான்பரப்பு ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தோனேஷியாவில் வறண்ட வானிலை நிலவும் போது, ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் வனப்பகுதிகள் தீப்பற்றி கரும்புகை வெளியேறுவதுண்டு. அந்தவகையில் இந்த ஆண்டு வனப்பகுதிகளில், பல ஹெக்டேர் பரப்பளவு நிலத்துக்கு தீப்பற்றி எரிந்து வருகிறது.இதனால் வானில் கரும்புகை வெளியேறி வருகிறது. பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், புகை படிந்திருக்கும் இந்தோனேஷியா வான் பரப்பு, கடந்த சனிக்கிழமை ரத்த சிவப்பு நிறத்துக்கு மாறியது.இதனை படம்பிடித்த ஒருவர் பேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து பலரும் அதிர்ச்சி தெரிவித்து, புகைப்படங்களை மறுபதிவிட்டு வந்தனர்.சுமார் 34,000 முறை அந்த பதிவு மறுபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வானில் சிவப்பு நிறம் தோன்றியதற்கு ‘ரேலே சிதறல்’ தான் காரணம் என அந்நாட்டு வானிலை மையம் கருத்து தெரிவித்துள்ளது.குறிப்பாக மாசு துகள்கள் மீது ஒளிக்கற்றைகள் பாய்ந்து ஒளிச்சிதறல் ஏற்படுத்தியதே இந்த நிகழ்வு தோன்ற காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

  • SaddleridgeFire19

    கலிபோர்னியாவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் தீ..: பல ஏக்கர் நிலம் நாசம், லட்சக்கணக்கானோர் வெளியெற்றம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்