SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

985
20/09/2019

ஆப்கானிஸ்தானில், மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த வெடிபொருட்கள் நிரம்பிய லாரி வெடித்து சிதறியதில் 20 பேர் உயிரிழந்தனர். அதிபர் தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளதால், தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்கும் விதமாக தலிபான் அமைப்பு தினந்தோறும் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று ஜாபுல் மாகாணத்தில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தை குறிவைத்து தலிபான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் வெடிகுண்டு நிரப்பப்பட்ட லாரி அதன் அருகே இருந்த மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டதால், லாரி வெடித்து சிதறி அங்கிருந்த 20 பேர் உயிரிழந்தனர். அவர்கள் நோயாளிகளாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 95 பேர் படுகாயமுற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மருத்துவமனையில் நிறுத்திவைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் அனைத்தும் சேதமடைந்தது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்