SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் ஏலியன் நடமாடும் மர்ம இடம் என்றழைக்கப்படும் ஏரியா-51ல் குவியும் ஆர்வலர்கள்!

1149
20/09/2019

அமெரிக்காவில் நெவாடா பாலைவனத்தில் அமைந்துள்ளது “AREA 51” என்று அழைக்கப்படும் அந்த இடம். அமெரிக்க விமானப்படை தலமாக செயல்படும் இந்த இடம் உலகில் உச்சபட்ச பாதுகாப்புகளை கொண்ட இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. “க்ரூம் லேக்” என்ற மிக நீண்ட உப்புப்படுகையின் மீது அமைந்துள்ளது இந்த இடம். பல ஆண்டுகளாக வெளிவராத ரகசியங்கள் இங்கு மறைந்திருப்பதாக பலரும் நம்புகின்றனர். ஏலியன் நடமாட்டங்களும் இங்கு அடிக்கடி நிகழ்வதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். ஆய்வின் அடிப்படையிலும் அமெரிக்காவில் இந்த நெவாடா பகுதியில் தான் அதிக அளவிலான ஏலியன் நடமாட்டம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த பகுதி பாதுகாப்புக்கு போலீஸ், ராணுவம் என்று யாரும் கிடையாது. இதற்கான பாதுகாப்பு பணியாளர்கள் எவ்வாறு, எங்கிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது எல்லாம் மர்மமே. இது அங்கு பணியாற்றும் சில உயர்நிலை அதிகாரிகளுக்கு கூட தெரியாது என்பது ஆச்சர்யத்தின் உச்சம். இந்த நிலையில், தற்போது வேற்று கிரக வாசிகள் (ஏலியன்) குறித்து ஆய்வு செய்யும் ஆர்வலகர் இந்த ஏரியா-15 என்ற மர்ம இடத்திற்கு குவிந்த வண்ணம் உள்ளனர். பல ஆண்டுகளாக, ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறை, அமெரிக்க விமானப்படை மற்றும் விண்வெளி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் அனைத்தும் ஏரியா 51 ஐ சோதனை விமானங்களுக்கு (“கருப்பு விமானம்”) அரங்கமாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது அந்த பகுதியில் ஏலியன் குறித்து தெரிவித்து கொள்ள ஆர்வலர்கள் பலர் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்