SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

635
19/09/2019

பெங்களூருவில் உள்ள யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் வங்கிக்குள் இருந்தவர்கள், மாடிக் கட்டிடத்தின் ஜன்னல் வழியாக வெளியேறி தப்பித்தனர்.பெங்களூரு எம்.ஜி சாலையில் அமைந்துள்ள 6 அடுக்கு மாடிக் கட்டிட வளாகத்தில் இயங்கிவரும் யூக்கோ வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கட்டிடம் முழுவதும் கரும்புகை பரவி அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது.இதையடுத்து, வங்கிக்குள் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு, மாடியில் உள்ள ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்.இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு படையினர் , தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தரைத் தளத்திலுள்ள மின் தூக்கியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

  • 15-10-2019

    15-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MauCylinderBlastUP

    உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • NorthEastSyriaTurkey

    சிரியாவின் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வரும் துருக்கி: அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உயிரிழப்பு!

  • DutchKingIndiaVisit

    அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னர்...: குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்