SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

642
16/09/2019

புதுடெல்லி: முந்தையக்கால புகைப்பட கருவிகள், கேமராக்கள் குறித்து வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் குர்கானில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் புகைப்பட கருவிகளின் வரலாறு, கேமராக்கள், அரிய புகைப்படங்கள், இது தொடர்பான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த மியூசியத்தில் 2000க்கும் மேற்பட்ட கேமராக்கள் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் ரகுராய், ஹோமாய் வியரவாலியா, ரகுபீர் சில், குல்வந்த் ராய், தயாநிதா சிங், பாப்லோ பார்தோ லோமியோ என ஏராளமான புகைப்பட கலைஞர்கள் தங்களது திறமையால் எண்ணற்ற காலத்தால் அழியாத புகைப்படங்களை நமக்கு அளித்துள்ளனர்.இவர்களது பணி, சாதனை, புகைப்படங்கள் மூலம் உருவான வரலாறு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளவும் இந்த குர்கான் அருங்காட்சியகம் உதவும். தி மியூசியோ கேமார- போட்டோ கிராபி சென்டர் என அழைக்கப்பட உள்ளது. இந்த அரிய முயற்சியில் பழங்கால அரிய கேமராக்களை சேகரித்து வரும் ஆதித்யா ஆர்யா, குர்கான் நகராட்சியும் இணைந்துள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்