SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

628
16/09/2019

சீனாவின் பாரம்பரிய இலையுதிர்கால திருநாளையொட்டி, ஹாங்காங் போராட்டக்காரர்கள் மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றினர்.ஹாங்காங்கில் குற்றஞ்சாட்டப்படுகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்திருத்த மசோதாவை ஹாங்காங் தலைவர் கேரி லேம் கொண்டு வந்தார்.இதனை திரும்ப பெறக்கோரி லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தியதை அடுத்து, கேரி லேம் அந்த மசோதாவை ரத்து செய்தார். இதனால் ஹாங்காங்கில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொருளாதார சிக்கல், எதிர்கால வேலை வாய்ப்பு, போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சுமார் 1,400 பேருக்கு பொது மன்னிப்பு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில், னாவின் அறுவடை விழாவான இலையுதிர்கால விழா கொண்டாடப்பட்டது.இதையடுத்து விக்டோரியா மலை நோக்கி படையெடுத்த போராட்டக்காரர்கள் ‘விடுதலைக்காக போராடுவோம்’((Fight for freedom)) என்ற வாசகத்துடன் கூடிய லேசர் விளக்குகளை ஏற்றி வைத்தனர். மேலும் சிலர் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டும் மனித சங்கிலியாக நின்றும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்