SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓணம் திருவிழா : அத்தப்பூ கோலமிட்டு, சென்டை மேளம் முழங்க ஆடல் பாடலுடன் கேரள மக்கள் கொண்டாட்டம்

751
12/09/2019

கேரளாவில், மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை திருமால் அழித்ததை நினைவு கூறும் வகையில், ஓணம் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரத்தில் கூடிய மக்கள், அத்தப்பூ கோலமிட்டு, சென்டை மேளம் முழங்க, ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சாதி-மத பேதமின்றி கேரள மக்களால் கொண்டாடப்படும் விழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா பத்தாம் நாளான திருவோணத்தில் நிறைவுபெற்றது.தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் அத்தப் பூக்கோலமிட்டு, புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர். பலவகை ருசியான உணவுகள் சமைத்து உண்டு இந்த நாளை கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். தும்பி துள்ளல், புலி விளையாட்டு, ஊஞ்சலாட்டம் போன்றவைகளால் கிராமங்கள் களைகட்டும். பாரம்பரிய படகுப் போட்டிகள், களறி போன்ற வீர விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.ஓணம் திருவிழாவை ஒட்டி கேரள நகரங்களில் யானைகளின் பவனி கண்கொள்ளா காட்சியாக அமைகிறது. யானைகளை அலங்கரித்தும் பட்டாடை ஆபரணங்கள்அணிவித்தும் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்