SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தில் 10 மகன்களுக்கு பின் பிறந்த பெண் குழந்தை: மகிழ்ச்சியின் உச்சத்தில் பெற்றோர்கள்

3187
11/09/2019

இங்கிலாந்தில் 10 மகன்களைப் பெற்ற தாய் 11-வதாக பெண் குழந்தையை பெற்றெடுத்தது குறித்து மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் தொடர்ச்சியாக 10 ஆண் குழந்தைகளைப் பெற்ற ஒரே தாயாக இருந்தவர் அலெக்சிஸ் பிரெட். 39 வயதான அவருக்கு 17 வயது முதல் 2 வயது வரை 10 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 11-வதாக பெண் குழந்தை பிறந்ததும் தான் நிலவின் உச்சிக்கே சென்றுவிட்டது போல் மகிழ்ச்சியை உணர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முற்றிலும் ஆண்கள் வசிக்கும் வீட்டில் இத்தனை காலம் வசித்து வந்த தமக்கு ஒரு மகள் பிறந்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாகக் கூறியுள்ளார். மிகவும் ஏங்கிய பெண் குழந்தை கிடைத்துவிட்டதால் இனி குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என அந்த தம்பதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்