SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொகரம் பண்டிகையை ஒட்டி நெஞ்சிலும், முதுகிலும் ரத்தம் சொட்ட சொட்ட நேர்த்திக்கடன் செலுத்திய ஷியா முஸ்லீம்கள்: புகைப்படங்கள்

960
10/09/2019

முஸ்லீம் மாதங்களில் முதல் மாதமான மொகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இம்மாதத்தின் 10ம் நாளில் நபிகள் நாயகத்தின்(ஸல்) பேரன் இமாம் ஹூசைன்(ரலி) கர்பலா என்ற யுத்த களத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருடன் தன்னுயிரையும் இழந்தார். இமாம் ஹூசைன் போரில் கொல்லப்பட்ட இந்தநாளை துக்க தினமாக ஷியா முஸ்லிம் பிரிவினர் அனுசரிக்கின்றனர். இதனை முன்னிட்டு ஷியா பிரிவு முஸ்லீம்கள் மொகரம் மாதத்தின் முதல் தேதியில் பஞ்சத்தன் என்ற கொடிமரத்தை வைத்து சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் கருப்பு கொடியேற்றி தங்களது துக்கத்தை தெரிவிக்கும் வகையில் மொகரம் முதல் தேதியிலிருந்து வீட்டிலிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் கருப்பு உடையணிந்து கொள்கின்றனர். இமாம் ஹூசைன் கொல்லப்பட்ட நாளான இன்று வரை விரதம் இருந்தனர். தொடர்ந்து மதியம் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. படையல் போடப்பட்ட பின்பு துக்க பாடல்களுடன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் நெஞ்சில் ஓங்கி அடித்துக் கொண்டு தொழுகை கூடத்தை கொடிமரத்துடன் வலம் வந்தனர். தொடர்ந்து உடம்பில் பிளேடினால் கீறிக்கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்களும் நெஞ்சில் அடித்துக் கொண்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • greexe_111

    கிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • octo_111

    ஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா

  • batman_tshirt11

    காமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்

  • circle_of_lightss1

    மாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்

  • climate_strike11

    பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்