SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போர்க்களமாக மாறிய ஹாங்காங்: போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையிடையே கடும் மோதல்... புகைப்படங்கள்!

823
26/08/2019

ஹாங்காங்கில், குற்றவழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக ஹாங்காங் அரசு சட்டத்திருத்த மசோதா நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி அரசுக்கு எதிராகவும், ஹாங்காங்கில் ஜனநாயக போக்கு நிலவ வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் நிறைந்த குவுன் டாங்((Kwun Tong)) மாவட்டத்திலும் போராட்டக்காரர்கள் காவலர்கள் மீது செங்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி போராட்டம் நடத்தினர். சாலைகளில் தடுப்புகளை அமைத்து, அங்கிருந்த ‘ஸ்மார்ட்’ விளக்கு கம்பத்தை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், கம்பத்தின் மீதிருந்த சிசிடிவி கேமராக்களையும் பெட்ரோல் குண்டு வீசி உடைத்தனர். இதனால் பதற்றம் நிலவவே, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார், 10 பெண்கள் உட்பட 29 பேரை கைது செய்தனர். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை சுமார் 700 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • DelhiBackToNormal282

    வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

  • president20

    எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

  • saudipudhuvellai11

    ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

  • vaanvali20

    சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

  • moon27

    பெரிய நிலவுக்கு போட்டியாக 3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா!: அதிசய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்