SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆழ்க்கடலில் உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களால் வேகமாக அழிந்து வரும் டைட்டானிக் கப்பலின் பாகங்கள்: புகைப்படங்கள் வெளியீடு

2191
23/08/2019

ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் கடலுக்குள் மூழ்கிய ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல், அதன் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஒரு புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 14 வருடங்களுக்கு முன்னால் அட்லாண்டிக் ஆழ்கடலுக்குச் சென்று, டைட்டானிக் கப்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த அதே ஆழ்கடல் டைவர் குழு, மீண்டும் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்து சோதிப்பதற்காக இந்த மாதம் சென்றபோது இந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அட்லாண்டிக் கடலின் 12,500 அடி ஆழத்தில் கிடக்கும் இந்த டைட்டானிக் கப்பலை, இந்தக் குழு ஆகஸ்ட் மாதம் மட்டும் சுமார் ஐந்து முறை சோதனை செய்துள்ளது. இந்த சோதனையின் போது உப்பினாலும், உலோகம் உண்ணும் பாக்டீரியாக்களாலும் கடலில் உள்ள அழுத்தத்தினாலும் டைட்டானிக் கப்பல் மிக வேகமாக அழிந்து வருகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த உலோகம் தின்னும் பாக்டீரியாக்கள் இயற்கையானது தான். ஆனால் டைட்டானிக் கப்பல் வெகு வேகமாக அழிந்து வருவதற்கு இந்த பாக்டீரியாக்கள் ஒரு குழுவாகச் செயல்படுவதே முக்கிய காரணம் என்றும் விஞ்ஞானி லோரி ஜான் தெரிவித்துள்ளார். ஆழ்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் இன்னும் சில காலங்களில் இல்லாமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டைட்டானிக் கப்பலின் தற்போதைய நிலையின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்