SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

764
20/08/2019

வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அரியானாவிலும் கனமழை கொட்டியதால், அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. அரியானாவில் உள்ள ஹத்னி குண்ட் தடுப்பணையிலிருந்து 1.43 லட்சம் கன அடி நீர் டெல்லியிலுள்ள யமுனா நதியை நோக்கி திறந்து விடப்பட்டது. இந்த நீரின் வரத்தால் யமுனா நதி ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. யமுனா நதியில் நீரின் அளவு 205.33 மீட்டரை தாண்டும் பட்சத்தில் அது மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். யமுனா நதியிலுள்ள நீரின் அளவு தற்போது 205 மீட்டரை எட்டியுள்ளது. ஆகவே யமுனா நதி அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. இதனையடுத்து யமுனா நதியின் மீது இருக்கும் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல லோஹா புல் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் யமுனா நதியின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்