SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்றத்தை அழகாக்கும் வகையில் 875 LED விளக்குகள் கொண்டு அலங்காரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்- புகைப்படங்கள்

1072
14/08/2019

டெல்லி: நாடாளுமன்றத்தை அழகாக்கும் விதத்தில் புதிதாக மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றிலும் 875 LED விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் நொடிக்கு ஒருமுறை ஒவ்வொறு நிறத்தில் வெளிச்சம் பாய்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய விளக்கு அலங்காரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இது குறித்து நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இரவு நேரத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தை வண்ண நிற அலங்காரத்தில் பொதுமக்கள் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற விளக்குகளை காட்டிலும், 5 மடங்கு குறைவாக மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும் LED விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்கு அலங்காரத்தின் மூலம் நாடாளுமன்ற கட்டிடத்தின் தோற்றம் மேலும் அழகாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்