SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடும் வெப்பம் காரணமாக கிரீஸ் நாட்டின் ஈவியா தீவில் பற்றி எரியும் காட்டுத்தீ..: அவசர நிலை பிரகடனம்!

716
14/08/2019

கிரீஸ் நாட்டில் உள்ள ஈவியா தீவில், வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்நாட்டில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக கிரீஸ் நாட்டில் வனப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத்தீ பரவி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஈவியா தீவில் உள்ள மலைப்பகுதியில் தீப்பற்றி எரிந்ததை அடுத்து வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் நீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காட்டுத்தீ காரணமாக ஈவியா தீவு முழுவதும் புகை மண்டலமா காட்சியளிக்கிறது. இந்த தீயானது, ஏதென்ஸ் நகருக்கும் பரவியுள்ளதால், அங்குள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • flood18

    இத்தாலியில் ஒரே வாரத்தில் 3வது முறையாக வெள்ளப்பெருக்கு: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • fire18

    மேகாலயாவில் நூற்றாண்டு பழமையான தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து: 2 பேர் பலி, ஏராளமான பொருட்கள் சேதம்

  • light18

    கிறிஸ்துவ பண்டிகை: பாரிஸில் கடல் உயிரினங்கள் வடிவில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான விளக்குகளின் தொகுப்பு

  • snow18

    சீனாவில் கடும் பனிப்பொழிவுடன் வீசிய அதிவேக காற்று: பனிமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

  • 18-11-2019

    18-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்