SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் வன்முறை: புகைப்படங்கள்

678
14/08/2019

ஹாங்காங்கில் குற்றமிழைப்பவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் சட்ட மசோதாவை, பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் அந்நாட்டு அரசு நிறைவேற்றாமல் கைவிட்டது. ஆனாலும் அரசின் தலைவருக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது போலீசார் தாக்கியதில் பெண் போராட்டக்காரர் ஒருவருக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து திங்களன்று பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து பெரும்பாலான போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறியதால் விமான நிலையம் காலையில் மீண்டும் இயங்க தொடங்கியது. ஆனால் போராட்டக்காரர்கள் 50 பேர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், நேரம் செல்ல செல்ல மீண்டும் கூட்டம் சேர துவங்கியது. பயணிகளின் காத்திருப்பு வளாகத்தில் கூடிய போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து போராட தொடங்கினர். இதனால் மீண்டும் குழப்பம் நிலவியதால், சில விமானங்கள் மட்டும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்