SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்யாவில் சர்வதேச ராணுவ விளையாட்டு போட்டி: தங்களது நாட்டின் பலத்தை நிரூபிக்க போராடிய ராணுவ வீரர்கள்

1242
09/08/2019

ரஷ்ய ராணுவம் சார்பில் மாஸ்கோ நகரில் சர்வதேச ராணுவ விளையாட்டுகள் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், செர்பியா, சீனா, சிரியா, வெனிசுலா, ஈரான், மங்கோலியா உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில், வான் வழி, தரை வழி, கடல் வழி என மூன்று பிரிவினருக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, ராணுவ டேங்குகள் போட்டி நடைபெற்றது. துல்லியமாக சுட்டுக் கொண்டே வேகமாக சென்று இலக்கை அடைந்த ராணுவ டேங்குகள் வெற்றிபெற்றவையாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், போட்டியில் கலந்து கொண்டுள்ள ராணுவ வீரர்களுக்கு போட்டி நிகழ்ந்தது. அதில், ஒவ்வொரு நாட்டு வீரர்களும் சுவர் ஏறுதல், கயிறேற்றம் போன்ற சாகசங்கள் மற்றும் தரை வழி தாக்குதல்களை நிகழ்த்தினர். அதில், சிறப்பாக விளையாடிய ராணுவ வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வான், கடல் பகுதிகளிலும் இதுபோன்ற ராணுவ விளையாட்டுகள் வருகிற 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்