SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புனித ஹஜ் யாத்திரையை முன்னிட்டு மெக்காவில் குவியும் இஸ்லாமியர்கள்...இதுவரை 18 லட்சம் பேர் வருகை

1304
08/08/2019

புனித ஹஜ் யாத்திரையை முன்னிட்டு சவுதிக்கு 18 லட்சம் பேர் வந்தள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதியின் மெக்காவில் உள்ள காபா என்ற இடத்திற்கு உலகில் உள்ள இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கானோர் சவுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சவுதியின் கடவுச்சீட்டு இயக்குநரகத்தின் ஜெனரல் சுலைமான் பின் அப்துல் அஜிஸ் எஹியா ((General Suleiman bin Abdul Azizi Al-Yehya)) கூறும்போது, நடப்பாண்டு ஹஜ் பயணத்திற்காக 18 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசாரும், ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்