SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மற்றும் மர்ம கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

728
24/07/2019

சீனாவின் ஹாங்காங் நகரில் கடந்த ஞாற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஹாங்காங்கில் குற்றச்சாட்டுக்கு ஆளாபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்திருத்ததை உடனடியாகக் கைவிட வலியுறுத்தி கடந்த 7 வாரங்களாக வார இறுதி நாட்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 21ம் தேதி நடந்த பேரணியில் 4 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வரை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்த வரம்பை மீறி முன்னேறிய சிலர் சீன அரசுக் கட்டிடங்களின் முன் இருந்த பலகைகளில் அதன் இலச்சினையை அழித்தனர். தொடர்ந்து முன்னேற முயன்றதால் போலீசார் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி விரட்டினர். போராட்டத்தில் ஈடுபட்டோர் கருப்பு நிற ஆடை அணிந்திருந்த நிலையில், வெள்ளை நிற டி சர்ட், முகமூடி அணிந்து வந்த கும்பல் ரயில் நிலையம் உள்பட சில இடங்களில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதல்களில் 45 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. போராட்டத்துக்குள் கலவரத்தை ஹாங்காங் அரசே தூண்டிவிடுவதாக போராட்டாக்காரர்கள் சிலர் குற்றம்சாட்டிய நிலையில், அரசு அதை மறுத்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்