SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கிய பியூர்டோ ரிக்கோ தீவின் ஆளுநர்: உடனே பதவி விலகக்கோரி மக்கள் பிரம்மாண்ட பேரணி

715
24/07/2019

அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள பியூர்டோ ரிக்கோ தீவில், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆளுநர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி போராட்டம் வலுத்துள்ளது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பியூர்டோ ரிக்கா தீவில், ஆளுநராக ரிக்கார்டோ ரோஸ்செல்லோ பதவி வகித்து வருகிறார். இவர் பெண்களுக்கு எதிராக இணையதளத்தில் உரையாற்றியுள்ளார். இந்த 889 பக்க இணையதள உரையாடல் அண்மையில் அந்நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்று வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து பியூர்டோ ரிக்கோவில் ஆளுநருக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 10 நாட்களாக லட்சக்கணக்கானோர் கருப்பு நிற சட்டையுடன் ஆளுநர் ரிக்கார்டோவுக்கு எதிராக, சான் ஜூயானிலிருந்து நகர சாலைகள் வழியாக கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். இதனிடையே,அடுத்தாண்டு நடைபெறும் மறுதேர்தலில் பங்கேற்கபோவதில்லை மற்றும் நியூ ப்ரொக்ரெஸ்வ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ரிக்கார்டோ தெரிவித்தும், போராட்டக்காரர்கள் அதனை ஏற்க மறுத்துள்ளதோடு, உடனடி பதவி விலக வலியுறுத்துகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • UkraineCoronaProtest

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

  • puthu2020

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

  • rayil21

    ஆஸ்திரேலியாவில் நொடி பொழுதில் தரம்புரண்ட பயணிகள் ரயில்: 2 பேர் பலி...ஏராளமானோர் படுகாயம்!

  • coronaa_vugaan11

    கொரொனா வைரஸ் வராம பின்ன என்ன வரும்? - பறவைகள், முயல்கள், வெளவால்கள், பாம்புகள் விற்கப்படும் வுஹான் கடல் உணவு சந்தை!!!

  • pakistan21

    பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் போட்ட பெண் கைது: போலீசார் அதிரடி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்