SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதன் முறையாக அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்: புகைப்படங்கள்

712
24/07/2019

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக அமெரிக்க அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். அவரது அமெரிக்க பயணம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது. 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, அதிபர் டிரம்ப், கிரிக்கெட் மட்டை ஒன்றை பரிசளித்துள்ளார். அதில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிவைட் எய்சென்ஹோவரின் (Dwight Eisenhower) புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி டிரம்பை இம்ரான்கான் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு போர், பிராந்திய ஸ்திரதன்மைக்கு சவாலாக இருக்கும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் நீண்ட ஆலோசனை நடத்தினர். காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா உதவ வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் அதற்கு ட்ரம்ப் சொன்ன பதிலும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்