SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

635
22/07/2019

சிசிலி: ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான இத்தாலியின் மவுண்ட் எட்னா வெடித்து தீப்பிழம்புகளை கக்கியது. சிசிலி தீவில் உள்ள எட்னா எரிமலை வெடித்து சிதறியதால் வெளி வந்த நெருப்பு குழம்பு, அருகிலுள்ள அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதனால் சிசிலியின் இரண்டாவது பெரிய நகரமான கட்டானியாவில் இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டது. எரிமலை அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கமே உறங்கிக் கொண்டிருந்த எட்னா எரிமலை லாவாவை கக்க காரணம் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 3,300 மீட்டர் உயரமுடைய எட்னா எரிமலை வெடித்து சிதறும் சம்பவம், அடிக்கடி நிகழ்ந்தாலும் இதுவரை குறைவான சேதத்தையே ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. எனினும் எரிமலைக்கு அருகில் வசித்து வரும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட நெருப்பு குழம்பானது சுமார் 1.5 கிமீ தொலைவு பயணித்து, எரிமலையின் தென்கிழக்கு முகத்தில் அமைந்துள்ள ஆக்ஸ் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பகுதியில் சேர்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்