SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்த மழை: குளிர்ந்த வானிலையில் மகிழ்ச்சியோடு பள்ளி சென்ற மாணவர்கள்

678
22/07/2019

சென்னை: மழைக்காக தவமாய் தவமிருக்கும் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்தது. வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு அடையாறு, கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், வில்லிவாக்கம், கொளத்தூர், ராயப்பேட்டை, ராயபுரம், காசிமேடு போரூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், கிண்டி, வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளிலும் நல்ல மழை கொட்டித் தீர்த்தது. அதே போல புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. கடந்த சில வாரங்களாகவே சென்னையில் அவப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த மழையால் தலைநகர்வாசிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • erimalai_11

    தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

  • china_isaai1

    150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

  • german_paanddaa1

    ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்