SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்..: 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்- புகைப்படங்கள்

506
22/07/2019

பெஷாவர்: பாகிஸ்தானில் சோதனை சாவடி, மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு உட்பட்ட தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்குள்ள கோட்லா சீடன் சோதனை சாவடிக்கு முகமூடி அணிந்தபடி இரண்டு மோட்டார் பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் அங்கிருந்த போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இதில் போலீசார் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் உடல்கள் மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது, அங்கு புர்கா அணிந்தபடி அமர்ந்திருந்த பெண் மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவர் ஆம்புலன்சை சுற்றியிருந்த மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார். இந்த தற்கொலை படை தாக்குதலில் இரண்டு போலீசார் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

  • 13-12-2019

    13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • erimalai_11

    தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்

  • china_isaai1

    150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்

  • german_paanddaa1

    ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்