SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

906
19/07/2019

எரிவாயு கசிவு காரணமாக, நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டமானதில் மக்கள் பதட்டமடைந்துள்ளனர். நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று காலை திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக, அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. காலை 10 மணியளவில் தெற்கு தீவுப்பகுதியில் உள்ள நார்த்வுட் என்னுமிடத்தில் உள்ள வீடு ஒன்று வெடித்துச் சிதறி தரைமட்டமானது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிறப்பு கமாண்டோ படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள சூழலில் முக்கிய காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்