SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

1081
19/07/2019

ஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் பலியாகியுள்ளனர். ஜப்பானின் க்யோட்டோ, நகரிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.அதில் தீ விபத்தால் வானளாவிய உயரத்துக்கு புகை எழுந்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என க்யோட்டோ நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றியதாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தீ விபத்தில் சிக்கி 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் தீவிபத்து ஏற்பட்ட 3 அடுக்குகள் கொண்ட கட்டிடத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Like Us on Facebook Dinkaran Daily News
  • SouravGangulyBCCI

    பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

  • SkyCityFireAuckland

    நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

  • NorthKarnatakaRain23

    கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

  • DiwaliPrep2k19

    நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

  • DanishLightHouse

    கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்