SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

955
16/07/2019

கிர்கிஸ்தானில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறைந்து கொள்ளும் போட்டி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. முன்னாள் குத்துச் சண்டை வீரரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த போட்டியில் 15 ஆண்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறும் நோக்கத்தைத் தவிர வேறு காரணம் ஏதும் இன்றி எதிர்முனையில் இருப்பவரைக் கன்னத்தில் ஓங்கி பளாரென அறைய வேண்டும். அந்த அடியை தவிர்க்காமல் பெற்றுக்கொண்டு நிலை தடுமாறாமல் நிற்க வேண்டும் என்பது விதி. அதன்பின், முதலில் அடி வாங்கிய நபர் திரும்ப தன் பலத்தைக் காட்டி சக போட்டியாளரின் கன்னத்தில் அறைய வேண்டும். இது போல் 5 முறை அடிக்க வேண்டும் என்ற நிலையில் ஒரு சிலர் நிலைதடுமாறிப் போயினர். கன்னத்தில் அறையும் போட்டியில் பங்கேற்ற ஒருவருக்கு பல் உடைந்தது. மற்றொருவருக்கு கன்னம் வீங்கிப் போனது. இந்தப் போட்டியில் 23 வயதான அமன் அய்டரோவ் என்ற இளைஞர் முதலிடம் பிடித்து வென்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்