SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருளில் மூழ்கிய நியூயார்க் நகரம்: மின்தடையால் 73,000க்கும் மேற்பட்ட வீடுகள், தொழில்கள் பாதிப்பு

591
15/07/2019

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மின்தடையானது பல மணி நேரங்களுக்கு பிறகு சீரமைக்கப்பட்டது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் ஏற்பட்ட மின்தடையால் 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மேலும் மின்தடையினால் புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர், சுரங்க பாதைகள் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. இதை தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக சுரங்க பாதைகளை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மின் தடை ஏற்பட்டதால் பலர் இரவில் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து சென்றனர். இதனையடுத்து நள்ளிரவு முதல் படிபடியாக மின்சார இணைப்பு சீரமைக்கப்பட்டது. மேலும் மின் இணைப்பு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் கூச்சலிட்டு கொண்டாடி வரவேற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்