SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

609
25/06/2019

துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயர் பதவிக்கு நடைபெற்ற மறுதேர்தலில், அந்நாட்டு அதிபர் தயீப் எர்டோகனின் கட்சி தோல்வியடைந்தது. எதிர்க்கட்சி வேட்பாளர் ஏக்ரெம் இமாமோக்லு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை இஸ்தான்புல் மற்றும் துருக்கி நகர மக்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். இஸ்தான்புல் நகர மேயர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஏக்ரெம் இமாமோக்லு, அதிபர் எர்டோகனின் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட பினாலி இல்டிரிமை மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் மோசடியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாக ஆளுங்கட்சி சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, மேயர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, மறுதேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. தேர்தல் முடிவடைந்த பிறகு, வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. அதில், இமாமோக்லு 54 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், இல்டிரிம் 45 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் வெற்றியை கொண்டாடும் வகையில், இசை முழக்கமிட்டு கொண்டாடினர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்