SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

646
25/06/2019

ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை தடுக்க வலியுறுத்தி காலநிலை ஆர்வலர்கள் அந்நாட்டின் நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்டுள்ளனர். சுமார் 500க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் நிலக்கரி சுரங்கப்பாதையை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நிலக்கரி கொண்டு செல்லப்படும் ரயில்வே தண்டவாளங்களில் தஞ்சம் அடைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு சுரங்கப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம், அதிபர் ஏஞ்செலா மெர்கெல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, எக்ஸ்டிங்சன் ரெபெல்லியன் அமைப்பைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 13 அரசுத் துறைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், 2025ம் ஆண்டிற்குள் பசுமைஇல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த போராட்டத்தை மேலும் வலுப்படுத்த சுரங்கத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டக்காரர்களை தடுக்க எண்ணற்ற போலீசார் அபபகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்