SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

1205
24/06/2019

வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து வடகிழக்கில் உள்ள சில்ஹெட் ((Sylhet)) நகரை நோக்கி உப்பாபன்((upaban)) எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுள்ளது.அப்போது டாக்காவில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குலாவ்ரா பகுதியில் ரயில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த பகுதியில் இருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அந்த ரயிலின் 5 பெட்டிகள் கவிழ்ந்தன.இதில், ஒரு பெட்டி கால்வாய்க்குள் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் சில்ஹெட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதிக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்