SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

870
24/06/2019

‘உலகின் மிக அழகற்ற நாய்’ என்ற பட்டத்தை இந்த ஆண்டு, லாஸ் ஏஞ்செலீஸ் நகரை சேர்ந்த ‘ஸ்கேம்ப் த டிராம்ப்’ என்ற நாய் பெற்றுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெடலுமா என்ற நகரில் ஆண்டு தோறும், அழகற்ற நாய்களுக்கான போட்டி நடைபெறும். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வித்தியாசமான நாய்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் மிகவும் அருவருப்பான நாய்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு 19 நாய்கள் பங்கேற்ற போட்டியில், லாஸ் ஏஞ்செலீஸ் நகரை சேர்ந்த யுவோன் மோரன்ஸ்((Yvonne Morones)) என்பவர் பராமரித்து வரும் ‘ஸ்கேம்ப் த டிராம்ப்’ என்ற நாய் பட்டத்தை பெற்றுள்ளது. நாய்க்கு கோப்பையுடன், பரிசு தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்துக்கு நான்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு நீளமான நாக்குடன் பார்க்க அருவருப்புடன் இருந்த ஸா ஸா என்ற புல்டாக் வகை நாய் இந்தபட்டத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • PopeFrancisInThailand

    முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்