SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

631
19/06/2019

பீகார் மாநிலம் முசாபர்பூரில் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு கடந்த வாரங்களில் கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு இருந்தபோதிலும் ரத்தத்தில் குளுக்கோசின் அளவு குறைவாக உள்ள காரணத்தால் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். அருகிலுள்ள கயா மாவட்டத்திலும் இந்த காய்ச்சல் பரவிவரும் நிலையில், முசாபர்பூரில் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 88 குழந்தைகளும் கெஜ்ரிவால் மருத்துவமனையில் 19 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகளின் உயிரை காக்க, அரசு தக்க நடவடிக்கை எடுக்க கோரி பீகாரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-07-2019

    23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • Chandrayaan2Isro22

    இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

  • DornierAircraftNavy

    இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

  • SicilyMountEtna22

    சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

  • IcelandPilotWhale

    ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்